இதுவரை 3,50,000 குழந்தைகளுக்கு 2,646 லிட்டர் தாய்ப்பால் தானம் கொடுத்துள்ள பெண்: மீண்டும் கின்னஸ் சாதனை

டெக்சாஸ்: இதுவரை 3,50,000 குழந்தைகளுக்கு 2,646 லிட்டர் தாய்ப்பால் தானம் கொடுத்துள்ள பெண் ஒருவர் மீண்டும் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவின் டெக்சாஸைச் சேர்ந்த அலிசா ஓக்லெட்ரீ (36) என்ற தாய், தனது இரக்க குணத்துக்கே அடையாளமாக திகழ்ந்துள்ளார். அவர் இதுவரை 2,645.58 லிட்டர் தாய்ப்பாலை குழந்தைகளுக்கு தானமாக வழங்கியுள்ளார். இதன் மூலம் அவர் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். மேலும் தாய்ப்பாலை தானமாக கொடுத்ததின் மூலம் அவர் நூற்றுக்கணக்கான குழந்தைகளின் வாழ்க்கையையும் ஆரோக்கியமானதாக உருவாக்கி உள்ளார்.

இதுகுறித்து ‘கின்னஸ்’ அமைப்பின் நிர்வாகிகள் கூறுகையில், ‘பச்சிளங் குழந்தைகளின் மிகவும் ஊட்டச்சத்து மிக்க உணவான தாய்ப்பாலை தொடர்ந்து அலிசா ஓக்லெட்ரீ வழங்கி வருகிறார். இவரது தாய்ப்பால் மூலம் 3,50,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் குடித்துள்ளனர். கடந்த 2014ம் ஆண்டில் 1,569.79 லிட்டர் தாய்ப்பாலை தானமாக வழங்கியிருந்தார். தற்போது அவரது சாதனையை அவரே முறியடித்து இதுவரை 2,645.58 லிட்டர் தாய்ப்பாலை குழந்தைகளுக்கு தானமாக வழங்கியுள்ளார். அவரது இரக்கமும், கருணையும் எல்லையற்றதாக உள்ளது’ என்று கூறினர். அலிசா ஓக்லெட்ரீயின் தாய்ப்பால் தானம் வழங்கும் பயணம் கடந்த 2010ம் ஆண்டு ெதாடங்கியது.

அப்போது அவருக்கு மகன் கைல் பிறந்தார். அப்போதிருந்தே தாய்ப்பாலை தானமாக வழங்கி வருகிறார். அலிசா ஓக்லெட்ரீக்கு அதிக அளவு பால் சுரக்கும் தன்மை இருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள், அவரை தாய்ப்பாலை தானமாக மற்ற பச்சிளங் குழந்தைகளுக்குமாறு அறிவுரை வழங்கினர். இதனை ஏற்றுக் கொண்டு தாய்ப்பால் தானம் செய்ய தொடங்கிய அலிசா ஓக்லெட்ரீ, உலக சாதனை படைத்து இருப்பதுடன் மற்றவர்களையும் தாய்ப்பால் தானம் செய்யுமாறு ஊக்குவித்து வருகிறார். அலிசா ஓக்லெட்ரீயாவுக்கு அதிகப்படியான பால் சுரப்பதற்கான காரணம் தெரியவில்லை என்றாலும், அவர் தொடர்ந்து தாய்ப்பால் தானத்தை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post இதுவரை 3,50,000 குழந்தைகளுக்கு 2,646 லிட்டர் தாய்ப்பால் தானம் கொடுத்துள்ள பெண்: மீண்டும் கின்னஸ் சாதனை appeared first on Dinakaran.

Related Stories: