144 தடை உத்தரவு மீறல் வழக்கு பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான் விடுதலை: இஸ்லாமாபாத் நீதிமன்றம் உத்தரவு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் தெஹ்ரிப்-இ-இன்சாப் கட்சி தலைவரும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கான், அல்-காதிர் அறக்கட்டளை ஊழல், தோஷகானா ஊழல் உள்பட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே பாகிஸ்தானில் பல்வேறு காலகட்டங்களில் தெஹ்ரிப்-இ-இன்சாப் கட்சியினர் நடத்திய போராட்டங்களின்போது பொதுஒழுங்கை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக கடந்த 2022 ஆகஸ்ட் 20ம் தேதி தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான், அவரது நெருங்கிய உதவியாளர்களான ஷேக் ரஷீத், ஆசார் கைசர், சைபுல்லா நியாசி, சதாகத் அப்பாசி, பைசல் ஜாவேத் மற்றும் அலி நவாஸ் ஆகியோர் மீது அப்வாரா காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கை நேற்று விசாரித்த இஸ்லாமாபாத் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி, 144 விதி மீறல் வழக்கில் இருந்து இம்ரான் கான் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

The post 144 தடை உத்தரவு மீறல் வழக்கு பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான் விடுதலை: இஸ்லாமாபாத் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: