×

கொங்குநாடு ஸ்டைல் சேனைக்கிழங்கு மசாலா

தேவையான பொருட்கள்:

சேனைக்கிழங்கு – 250 கிராம்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – 1 டீஸ்பூன்
கடலை எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

மசாலாவிற்கு

கடலை எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
பட்டை – 2 இன்ச்
கிராம்பு – 2
பூண்டு – 6 பல்
இஞ்சி – 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
வரமிளகாய் – 5
சோம்பு – 1 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
துருவிய தேங்காய் – 1/2 கப்
கசகசா – 1 டேபிள் ஸ்பூன்
மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – 1 டீஸ்பூன்
தண்ணீர் – 1 கப்

தாளிப்பதற்கு

கடலை எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

முதலில் சேனைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, நன்கு கழுவி, சிறு சிறு நீளத் துண்டுகளாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் சேனைக்கிழங்கு, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து 5-7 நிமிடம் கிழங்கை வேக வைத்து இறக்கி, நீரை வடிகட்டிவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் கடலை எண்ணெய் ஊற்றி சூடானதும்,சேனைக்கிழங்கைப் போட்டு 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து ப்ரை செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.* அடுத்து ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, பூண்டு, இஞ்சி, வரமிளகாய், சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து சில நொடிகள் நல்ல மணம் வரும் வரை வறுக்க வேண்டும்.பின் அதில் துருவிய தேங்காய், கசகசா, மல்லித் தூள், உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.அடுத்து அதை மிக்சர் ஜாரில் போட்டு, 1 கப் நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.பின் அதில் அரைத்த மசாலா மற்றும் சேனைக்கிழங்கை சேர்த்து நன்கு கிளறி, குறைவான தீயில் வைத்து, மசாலா நன்கு சேனைக்கிழங்குடன் சேரும் வரை வதக்கி இறக்கினால், சுவையான கொங்குநாடு ஸ்டைல் சேனைக்கிழங்கு மசாலா தயார்.

The post கொங்குநாடு ஸ்டைல் சேனைக்கிழங்கு மசாலா appeared first on Dinakaran.

Tags : Kongunadu ,Dinakaran ,
× RELATED நடித்தல் போட்டியில் உடுமலை மாணவிகள் சாதனை