×

காலிஃப்ளவர் கொண்டைக்கடலை மசாலா

மசாலா பொடிகள்

கரம் மசாலா – 1 டேபிள் ஸ்பூன்
சீரகப் பொடி – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – 1/2 டீஸ்பூன்

வதக்குவதற்கு

வெங்காயம் – 1
பூண்டு – 3 பல்
இஞ்சி – 1 இன்ச் (துருவியது)
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
காலிஃப்ளவர் – 1 கப்
கொண்டைக்கடலை – 1 கப் (நீரில் 8 மணிநேரம் ஊற வைத்தது)
தக்காளி சாஸ் – 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – 1/4 கப்
க்ரீம் – 1/3 கப்
உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் மசாலா பொடிகள் அனைத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் கொண்டைக்கடலையை குக்கரில் போட்டு நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து, சிறிது உப்பு சேர்த்து 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.* பின்னர் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நீர் கொதிக்க ஆரம்பித்ததும், காலிஃப்ளவரைப் போட்டு, சிறிது மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து 3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, நீரை வடிகட்டிவிட்டு, காலிஃப்ளவரை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.பின் வெங்காயம், பூண்டு ஆகியவற்றை பொடியாக வெட்டிக் கொள்ள வேண்டும் மற்றும் இஞ்சியை துருவிக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், பூண்டு மற்றும் இஞ்சியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.* அடுத்து அதில் மசாலா பொடிகளை சேர்த்து நன்கு 1 நிமிடம் கிளற வேண்டும். பின் அதில் காலிஃப்ளவரை சேர்த்து, 5 நிமிடம் காலிஃப்ளவருடன் மசாலா பொடிகள் சேரும் வரை கிளற வேண்டும்.
பின் அதில் கொண்டைக்கடலை, தக்காளி சாஸ் மற்றும் 1/4 கப் நீரை ஊற்றி கிளறி, மிதமான தீயில் வைத்து 15 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். ஒருவேளை மசாலா மிகவும் கெட்டியாக இருந்தால், அதில் சிறிது நீரை ஊற்றி கொள்ளவும்.15 நிமிடம் கழித்ததும் அடுப்பை அணைத்துவிட்டு, க்ரீமை சேர்த்து கிளறி, சுவைக்கு உப்பு வேண்டுமானால் சேர்த்து கிளறினால், சுவையான காலிஃப்ளவர் கொண்டைக்கடலை மசாலா தயார்.

The post காலிஃப்ளவர் கொண்டைக்கடலை மசாலா appeared first on Dinakaran.

Tags :
× RELATED உப்பு கார உருண்டை