×

காந்தி கிராமம் அருகே வடிகால்களை சிலாப் கொண்டு மூட வேண்டும்:

கரூர், நவ. 11: கரூர் திருச்சி சாலையில் காந்தி கிராமம் அருகே வடிகால்களை சிலாப் கொண்டு மூட தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காந்தி கிராமம் வழியாக கரூரில் இருந்து திருச்சி செல்லும் அனைத்து வாகனங்களும் இநத பகுதியின் வழியாக சென்று வருகிறது.

தெரசா கார்னர் பகுதியில் இருந்து காந்திகிராமம் வரை சாலையின் இருபுறமும் அதிகளவு வர்த்தக நிறுவனங்களும், குடியிருப்புகளும் உள்ளன. இந்நிலையில், இந்த சாலையின் குறிப்பிட்ட தூரம் வரை வடிகால்கள் திறந்த நிலையில் உள்ளன. இதன் காரணமாக இரவு நேரங்களில் சாலையில் பயணிக்கும் அனைவரும் பீதியுடன் செல்லும் நிலையில் உள்ளனர். இதன் காரணமாக அவ்வப்போது விபத்துக்களும் நடைபெறுகிறது.

எனவே, திறந்த நிலையில் உள்ள வடிகால்கள் மீது சிலாப் வைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாகவே உள்ளது. எனவே, அனைவரின் நலன் கருதி திறந்த நிலையில் உள்ள வடிகால்களை சிலாப் கொண்டு மூடுவதற்கான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

துறை அதிகாரிகள் இதனை பார்வையிட்டு, வாகனங்கள் பாதுகாப்புடன் செல்ல தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post காந்தி கிராமம் அருகே வடிகால்களை சிலாப் கொண்டு மூட வேண்டும்: appeared first on Dinakaran.

Tags : Gandhi village ,Karur ,Karur Trichy road ,Trichy ,Karur Corporation ,Dinakaran ,
× RELATED மெடிக்கல் ஷாப்பில் பெண் ஊழியரிடம் செயின் பறிக்க முயற்சி