வேலாயுதம்பாளையம், ஜன. 1: கயிறு இழுத்தும் போட்டிக்கு இந்திய அணிக்கு தேர்வு பெற்ற அரசு பள்ளி மாணவிகள் 2 பேருக்கு கரூர் மாநகராட்சி காங்கிரஸ் உறுப்பினர் ஸ்டீபன் பாபு ரூ,20000 நிதி உதவி வழங்கினார். கயிறு இழுக்கும் போட்டி இந்திய அளவில் பிரசித்தி பெற்ற போட்டியாகும். இந்த போட்டியின்படி இரு அணிகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அணிக்கும் தலா 11 பேர் பிரிக்கப்பட்டு சக்தி வாய்ந்த ஒரு கயிற்றில் மையப் பகுதியில் ஒரு ரிப்பன் கட்டப்படும். அதன் பின் ஒவ்வொரு அணிக்கும் 11 பேர் கயிற்றை அங்கும் இங்கும் இழுப்பார்கள். மொத்தம் போட்டி மூன்று முறை நடக்கப்படும். இதில் 2 முறை வெற்றி பெறுபவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
இந்த போட்டி பார்ப்பதற்கும் ரசிப்பதற்கும் மிகவும் ரம்மியமாக இருக்கும். இன்னும் கிராமப்புறங்களில் மக்கள் விரும்பி விளையாடும் விளையாட்டுகளில் இவ் விளையாட்டும் ஒன்று. இத்தனை சிறப்புமிக்க இந்த விளையாட்டிற்கு கரூர் ஆண்டாங்கோவில் முனியப்பன் கோயில் அரசு பள்ளி சிந்து, மின்னாம்பள்ளி அரசு பள்ளி மாணவி நிவேதிதா தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் மகாராஷ்டிராவில் நடைபெற உள்ள இந்திய அளவிலான கயிறு இழுக்கும் போட்டியில் கலந்து கொள்கின்றனர். இவருக்காக பயண செலவு மற்றும் பிற செலவுகளை கரூர் ஹோம் லைன் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளரும் கரூர் வடக்கு மாநகர காங்கிரஸ் கமிட்டி தலைவரும் ஆட்சி மாநகராட்சி கவுன்சில்மான ஆர்.ஸ்டீபன் பாபு, ஆர்.செல்வம் ஆகியோர் ரூ.20000 வழங்கி வெற்றி பெற வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.
The post கயிறு இழுக்கும் இந்திய அணிக்கு தேர்வு பெற்ற அரசு பள்ளி மாணவிகளுக்கு கவுன்சிலர் நிதி உதவி appeared first on Dinakaran.