திருவொற்றியூர் 12வது வார்டில் ரூ.10 லட்சம் செலவில் சாலையோர பூங்கா

திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலம், 12வது வார்டுக்கு உட்பட்ட மேற்கு மாட வீதியில், சாலையோர பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டு, வார்டு கவுன்சிலர் நிதி ரூ.10 லட்சம் செலவில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. இதற்கான, பூமி பூஜை நிகழ்ச்சி வார்டு கவுன்சிலர் வழக்கறிஞர் வீ.கவிகணேசன் தலைமையில் நேற்று நடந்தது. முன்னாள் கவுன்சிலர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார். மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார்.

இந்த பூங்காவில் இருக்கைகள், சிறுவர்கள் விளையாட்டு உபகரணம், அலங்கார விளக்கு, அழகு செடிகள் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு, அடுத்த மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். நிகழ்ச்சியில், உதவி பொறியாளர் கமலக்கண்ணன், முன்னாள் கவுன்சிலர் எம்.வீ.குமார் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post திருவொற்றியூர் 12வது வார்டில் ரூ.10 லட்சம் செலவில் சாலையோர பூங்கா appeared first on Dinakaran.

Related Stories: