மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

சென்னை: அடையாறு கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், நாளை (2ம் தேதி) காலை 10.30 மணிக்கு, செயற் பொறியாளர், அடையாறு, தரைதளம், வேளச்சேரி துணை மின் நிலைய வளாகம், வேளச்சேரி மெயின் ரோடு, வேளச்சேரி என்ற முகவரியில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து தீர்வு பெறலாம். இதேபோல், ஆவடி மற்றும் பெரம்பூர் கோட்டங்களில், நாளை மறுநாள் (3ம் தேதி) காலை 11.00 மணிக்கு மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

ஆவடி கோட்டத்திற்கு, செயற் பொறியாளர், ஆவடி கோட்ட அலுவலகம், ஆவடி துணை மின் நிலைய வளாகம், எஸ்.எம்.நகர், முருகப்பா பாலிடெக்னிக் அருகில், ஆவடி என்ற முகவரியிலும், பெரம்பூர் கோட்டத்திற்கு, செயற் பொறியாளர், பெரம்பூர் அலுவலகம், செம்பியம் துணை மின் நிலைய வளாகம், எம்.இ.எஸ் ரோடு, சிம்சன் எதிரில் என்ற முகவரியிலும் நடைபெறும். பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெறலாம், என மின் வாரியம் தெரிவித்துள்ளது.

The post மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: