ஐடிஐ படித்தவர்களுக்கு தொழிற் பழகுநர் பயிற்சி முகாம்: இன்று நடக்கிறது

சென்னை: மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், சென்னை மற்றும் இந்திய அரசு, தென்மண்டல திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு இயக்ககம் இணைந்து ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு மாவட்ட அளவிலான தேசிய தொழிற் பழகுநர் பயிற்சி முகாம், இன்று (11ம் தேதி) நடைபெறுகிறது. இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், சென்னை மற்றும் இந்திய அரசு, தென்மண்டல திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு இயக்ககம் இணைந்து ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு மாவட்ட அளவிலான தேசிய தொழிற் பழகுநர் பயிற்சி முகாம் நடத்த உள்ளது.

பல்வேறு தொழிற் பிரிவுகளை சேர்ந்த பயிற்சியாளர்களுக்கு தொழிற் பழகுநர் பயிற்சி வழங்குவதற்காக, மாவட்ட அளவிலான தேசிய தொழிற் பழகுநர் முகாம், இன்று (11ம் தேதி) காலை 9 மணியளவில் ஆர்.கே.நகர், அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் (வடசென்னை அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில்) நடைபெற உள்ளது. இதில் அரசு மற்றும் தனியார் தொழிற் நிறுவனங்கள் கலந்து கொண்டு தொழிற் பழகுநர் பயிற்சி வழங்க ஐ.டி.ஐ. படித்து தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் மற்றும் 8, 10, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களை தொழிற் பழகுநராக தேர்வு செய்ய உள்ளனர்.

தற்போது தொழிற் பழகுநராக சேர்க்கை செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு மாதாந்திர உதவித் தொகையாக குறைந்தபட்சம் ரூ.8000 மற்றும் தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ் வழங்கப்படும். இதுவரை தொழிற் பழகுநர் பயிற்சி முடிக்காத அரசு, தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் www.apprenticeshipindia.gov.in இணையதள முகவரியில் பதிவு செய்து, அசல் கல்வி சான்றிதழ்களுடன் இம்முகாமில் கலந்து கொள்ளலாம்.

The post ஐடிஐ படித்தவர்களுக்கு தொழிற் பழகுநர் பயிற்சி முகாம்: இன்று நடக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: