×

தொடர் குற்றங்களில் ஈடுபட்ட வாலிபர் குண்டாசில் கைது

சேலம், நவ.10: ஆட்டையாம்பட்டி வண்டுக்காடு நவாப் மேட்டை சேர்ந்தவர் சக்கரை என்கிற சக்கரவர்த்தி (27). கடந்த மாதம் 21ம் தேதி சக்கரவர்த்தி, சின்னசீரகபாடியை சேர்ந்த அய்யனார் என்பவரிடம் கடத்தூர் ஏரி அருகே கஞ்சா விற்றபோது, ஏற்பட்ட தகராறில் அரிவாளால் தோள்பட்டையில் வெட்டி, அவரிடமிருந்த பணத்தை பறித்துக்கொண்டு சென்றுவிட்டார். இதேபோல், கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி முன்விரோதம் காரணமாக ஆட்டையாம்பட்டியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரை சக்கரவர்த்தி தனது நண்பர்களுடன் சேர்ந்து, அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்தனர். அப்போது சக்கரவர்த்தி அவரது நண்பர்கள் பாலகிருஷ்ணன், அவரது கர்ப்பிணி மனைவி தாக்கி காயப்படுத்தினார். சக்கரவர்த்தி தொடர் குற்றங்களில் ஈடுபட்டு பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டார். அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய, சேலம் சிட்டி போலீஸ் கமிஷனர் (பொ) உமா உத்தரவு பிறப்பித்தார். இதற்கான சார்வு சேலம் மத்திய சிறையில் உள்ள சக்கரவர்த்திக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

The post தொடர் குற்றங்களில் ஈடுபட்ட வாலிபர் குண்டாசில் கைது appeared first on Dinakaran.

Tags : Gundasi ,Salem ,Chakraborty ,Sakkarai ,Vandukkadu Nawab Met ,Attaiyambatti ,Ayyanar ,Chinnaseeragabadi ,Kaduur lake ,
× RELATED திருடிய காரை சேலத்தில் விட்டுச்சென்ற மர்மநபர்கள்