×
Saravana Stores

ஒரேநாளில் 2153 காவலர்கள் பணியிட மாற்றம் செய்து டிஜிபி உத்தரவு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 2,153 போலீசாருக்கு பணியிட மாறுதல் வழங்கி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு அளித்துள்ளார். சென்னை பெருநகர காவல்துறையில் நிா்வாக வசதிக்காகவும்,விருப்பத்தின் அடிப்படையிலும், ஒழுங்கீனம் உள்ளிட்ட காரணங்களாலும் அதிகாரிகள் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா்.

முதல் நிலை காவலர்கள் முதல் உதவி ஆய்வாளர்கள் வரை பணியிட மாறுதல் கோரி மனு அளித்தனர். மனுவின் அடிப்படையில் 2,153 காவலர்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு அளித்துள்ளார்.

நகரங்கள், மாவட்டங்களுக்கு இடையே 2,153 போலீசார் டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஒரே நாளில், 2 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளது காவல்துறையில் பேசுபொருளாகியுள்ளது.

2053 போலீசாருக்கு பணியிட மாறுதல் உத்தரவு அளிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலர்கள், அதற்கேற்ப தேவையான உத்தரவுகளை பிறப்பித்து, பணியில் இருந்து விடுவிக்கப்படும் மற்றும் புதிய இடத்தில் பணியில் சேரும்தேதியை உடனடியாக தலைமை அலுவலகத்திற்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

The post ஒரேநாளில் 2153 காவலர்கள் பணியிட மாற்றம் செய்து டிஜிபி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : DGP ,CHENNAI ,Shankar Jiwal ,Tamil Nadu ,Chennai Metropolitan Police ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் 2,153 போலீசாருக்கு...