×

இட்லி மாவு கார போண்டா

தேவையான பொருட்கள்:

புளித்த இட்லி மாவு – 1 கப்
ரவை – 2 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு -1 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் – 3 (சுடுநீரில் 10 நிமிடம் ஊற வைத்தது)
பூண்டு – 3 பல்
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை -1 கொத்து (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி – சிறிது (பொடியாக நறுக்கியது)
சீரகம் – 1/4 டீஸ்பூன்
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் இட்லி மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.பின் அதில் அரிசி மாவு மற்றும் ரவையை சேர்த்து நன்கு கலந்து, மூடி வைத்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.அதேப் போல் வரமிளகாயை சுடுநீரில் போட்டு, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.10 நிமிடம் கழித்து, வரமிளகாயை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் பூண்டு பற்களை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.பின்பு ஊற வைத்த மாவுடன், அரைத்த வரமிளகாய் விழுதை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் சீரகம் சேர்த்து நன்கு கைகளால் கலந்து கொள்ள வேண்டும்.இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை, கொஞ்சம் கொஞ்சமாக கிள்ளிப் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான இட்லி மாவு கார போண்டா தயார்.

The post இட்லி மாவு கார போண்டா appeared first on Dinakaran.

Tags :
× RELATED வாழைப்பிஞ்சு பருப்பு உப்புமா