×
Saravana Stores

முதல் முறையாக தூர்வாரப்பட உள்ள மேட்டூர் அணை

சென்னை: 1934ல் கட்டப்பட்ட மேட்டூர் அணை முதல் முறையாக தூர்வாரப்பட உள்ளது. அணையின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் தூர்வாருவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் வனத்துறை அனுமதியை பெற ஆலோசகர்களை நியமனம் செய்ய நீர்வளத்துறை டெண்டர் வெளியிட்டுள்ளது. 1.40 லட்சம் யூனிட் வண்டல் மண்ணை தூர்வார திட்டமிடப்பட்டுள்ளது. 1934ல் கட்டப்பட்ட மேட்டூர் அணை, ஏறத்தாழ 90 ஆண்டுகளாக தூர் வாரப்படாமல் உள்ளது.

1934 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட மேட்டூர் அணை ஏறத்தாழ 90 ஆண்டுகளாக தூர் வாரப்படாததால், அணையின் கொள்ளளவில் சுமார் 30 சதவீதம் அளவுக்கு மண் சேர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அணையை தூர் வாரினால், 30 டிஎம்சி அளவிற்கு கூடுதலாக தண்ணீரை சேமிக்க முடியும் எனக் கூறப்படுவதால், இதற்காக விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

அணையை முழுமையாக தூர்வார ரூ.3,000 கோடிக்கு மேல் செலவாகும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், அணையில் குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டும் தூர்வாருவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் வனத்துறை அனுமதியை பெற ஆலோசகர்களை நியமனம் செய்ய நீர்வளத்துறை டெண்டர் வெளியிட்டுள்ளது. இதன் மூலம், 1 லட்சத்து 40 ஆயிரம் யூனிட் வண்டல் மண்ணை தூர்வார முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

The post முதல் முறையாக தூர்வாரப்பட உள்ள மேட்டூர் அணை appeared first on Dinakaran.

Tags : Mettur ,CHENNAI ,Water Resources Department ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்தது