- தமிழ்நாடு அரசு
- சர்வதேச கடற்படை பாதுகாப்பு மைய
- மனோரா கடற்கரை
- தஞ்சாவூர் மாவட்டம்
- தஞ்சாவூர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- இந்தியா
- தமிழ்நாடு அரசு
- தின மலர்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் மனோரா கடற்கரையில் ரூ.15 கோடி சர்வதேச கடற்பசு பாதுகாப்பு மையத்தை தமிழ்நாடு அரசு அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வன விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இந்தியாவில் கடற்பசு இனங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், வாழ்விட இழப்பு காரணமாக கடற்பசு இனங்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிறது.
தற்போது சுமார் 240 கடற்பசுக்கள் இருப்பதாக தெரியவந்தது . பெரும்பான்மையான கடற்பசுக்கள் தமிழ்நாட்டின் கடற்கரை பகுதிகளில் காணப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து இவற்றை பாதுகாக்க பாக்விரிகுடாவில் “கடற்பசு பாதுகாப்பகம்” அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதன்படி தமிழக சட்டப்பேரவையில், கடற்பசு இனத்தையும் அதன் கடல் வாழ்விடங்களையும் பாதுகாக்கும் பொருட்டு மன்னார்வளைகுடா, பாக்விரிகுடா பகுதியில் “கடற்பசு பாதுகாப்பகம்“ அமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.
இதனைத் செயல்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி தஞ்சாவூர் மாவட்டம் மனோரா கடற்கரையில் ரூ.15 கோடியில் சர்வதேச கடற்பசு பாதுகாப்பு மையம் அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் முழுவதுமாக பொதுமக்களை அனுமதிக்கும் பகுதி, பகுதி அளவு பொதுமக்களை அனுமதிக்கும் போது, பொதுமக்களுக்கு அனுமதி இல்லாத பகுதி என்று மூன்று பகுதியாக இந்த மையம் அமைக்கப்படும்.
கடல் பசு வடிவிலான மையம், அருங்காட்சியகம், 4டி அரங்கம், பூங்கா, திறந்தவெளி அரங்கம், உணவகம், வாகன நிறுத்துமிடம், செல்ஃபி பாயிண்ட், குடிநீர் வசதி, மிகப்பெரிய அளவிலான முகப்பு ஆகியவைகள் இடம்பெற உள்ளன. 448 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளை உள்ளடக்கிய பாக்விரிகுடா கடற்பசு பாதுகாப்பகமாக (Dugong Conservation Reserve) ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
The post தஞ்சாவூர் மாவட்டம் மனோரா கடற்கரையில் ரூ.15 கோடியில் சர்வதேச கடற்பசு பாதுகாப்பு மையம் அமைக்கிறது தமிழ்நாடு அரசு..!! appeared first on Dinakaran.