×
Saravana Stores

திருச்சியில் சிறுதானியங்களின் பாரம்பரிய உணவு திருவிழா

திருச்சி : திருச்சியில் நேற்று நடந்த சிறுதானியங்கள் பாரம்பரிய உணவு திருவிழா நேற்று நடந்தது.தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 14 வட்டாரங்களிலும் வட்டார அளவில் நடைபெற்ற ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டிகளில் முதல் பரிசு பெற்ற சுய உதவிக்குழுக்களை கொண்டு.

தற்போது மாவட்ட அளவில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டி “ரத்தசோகை இல்லாத கிராமம்” என்ற தலைப்பில் சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று நடைபெற்றது.சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவு திருவிழாவில் வட்டார அளவில் வெற்றி பெற்ற போட்டிகளில் முதலிடம் பிடித்த 14 மகளிர் சுய உதவிக்குழுவினர் பங்குபெற்றனர். இந்த உணவு திருவிழாவில் சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய முறையில் உணவுகளை சமைத்து காட்சிப்படுத்தினர்.

இந்த கண்காட்சியை திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) சுரேஷ், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) கங்காதரணி ஆகியோர் தொடங்கி வைத்து சுய உதவிக்குழுக்கள் தயாரித்த சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவு பொருட்களை பார்வையிட்டனர்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூகநல அலுவலர் விஜயலட்சுமி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் நித்யா, உதவி திட்ட அலுவலர்கள், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலர்கள், மகளிர் உரிமைதுறை அலுவலர்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

The post திருச்சியில் சிறுதானியங்களின் பாரம்பரிய உணவு திருவிழா appeared first on Dinakaran.

Tags : Trichy ,grain ,Tamil Nadu Rural Livelihood Movement ,grain traditional food ,
× RELATED சார்ஜாவில் இருந்து திருச்சி வந்த...