நவ.11-ல் பா.ஜ.க. உயர்மட்ட குழு ஆலோசனை

சென்னை: சென்னையில் நவ. 11-ம் தேதி பா.ஜ.க. உயர்மட்டக் குழு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. பா.ஜ.க. அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் எல்.முருகன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். 1 கோடி உறுப்பினர்களை சேர்க்க தேசிய தலைமை அறிவுறுத்திய நிலையில், 10 லட்சம் பேர் வரை மட்டுமே உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உறுப்பினர் சேர்க்கை விவகாரத்தில் தேசிய தலைமை, மாநில தலைமை மீது அதிருப்தியில் உள்ளதால், உயர்மட்டக் குழு கூட்டம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post நவ.11-ல் பா.ஜ.க. உயர்மட்ட குழு ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: