பொற்கொல்லர்களிடம் நேரில் கலந்துரையாடி குறைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். பின்னர் கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள் உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். அதில் “அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணிகளைச் செய்ய வேண்டும். எந்த எதிர்பார்ப்புமின்றி கட்சிக்காக உழைக்கும் தொண்டர்களுக்கு நாம் என்ன செய்கிறோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்; இளைஞர்களிடம் கொள்கைகளை விதைப்பது மிக முக்கியம். இளைஞர்கள்தான் எதிர்காலத்திற்கான விதைகள்.
பேச்சாளர்களை அழைத்து பாசறைக் கூட்டங்களை நடத்த வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் கொள்கை வீரர்களாக இளைஞர்களை உருவாக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. நிர்வாகிகள் தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதுடன் தொழிலிலும் கவனம் செலுத்த வேண்டும். தினமும் 2 மணி நேரத்தை கட்சிக்காகவும், வார இறுதியில் முழுமையாக ஒருநாளை கட்சிப் பணிக்காவும் ஒதுக்குங்கள். நம்முடைய கட்சிக்கு உள்ள கட்டமைப்பு தமிழ்நாட்டில் வேறு எந்தக் கட்சிக்கும் இல்லை. அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணிகளைச் செய்ய வேண்டும்” என கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
பின்னர் கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் முதல்வர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் “2026 சட்டமன்றத் தேர்தலிலும் திமுகவே வெல்லும். 2026 சட்டமன்றத் தேர்தலிலும் திமுகவே வெல்லும் என்பதை மக்களின் வரவேற்பில் இருந்து தெரிந்து கொண்டேன். தங்க நகை தொழில் பூங்கா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும். கோவை மக்கள் பல கோரிக்கைகளை வைத்துள்ளனர், அது நிறைவேற்றித் தரப்படும்” என முதலமைச்சர் தெரிவித்தார்.
The post 2026 சட்டமன்றத் தேர்தலிலும் திமுகவே வெல்லும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி appeared first on Dinakaran.