×

கார்ன் ஃப்ளேக்ஸ் ஜாமூன் மிக்ஸர்

தேவையானவை:

கார்ன்ஃப்ளேக்ஸ் – 2 கப்,
குலோப் ஜாமூன் மிக்ஸ் பவுடர் – 1 கப்,
எண்ணெய் பொரிக்க, உலர் திராட்சை – 2 டேபிள் ஸ்பூன், வேர்க்கடலை – 5 டேபிள் ஸ்பூன்,
முந்திரி – 2 டேபிள் ஸ்பூன்,
கறிவேப்பிலை, உப்பு,
மிளகாய் தூள் – 2 டேபிள்ஸ்பூன்,
பெருங்கயம் – 1 டீஸ்பூன்.

செய்முறை:

குலோப் ஜாமூன் பவுடரை சிறிது நீர் விட்டு கெட்டியாக பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் ஜாமூன் உருண்டைகளை பொரிக்கவும். அதே வாணலியில் வேர்க்கடலை, முந்திரி துண்டுகள், கறிவேப்பிலை வறுத்து அதனுடன் வறுத்த ஜாமூன் உருண்டைகள், உப்பு, மிளகாய் தூள், பெருங்காயத்தூள், உலர்திராட்சை சேர்த்து சூடு இருக்கும்போதே நன்கு சேர்த்துக் கலந்து விடவும். வேறு வாணலியில் எண்ணெய் ஊற்றி கார்ன்ஃப்ளேக்ஸ் வறுத்து உப்புத் தூவி இறக்கி கலந்து வைத்துள்ள கலவையில் சேர்த்து அனைத்தையும் நன்றாக குலுக்கி விடவும். உடனே செய்து விடலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த கார்ன்ஃப்ளேக்ஸ் மிக்ஸர் ரெடி.

The post கார்ன் ஃப்ளேக்ஸ் ஜாமூன் மிக்ஸர் appeared first on Dinakaran.

Tags : Corn Flakes ,Dinakaran ,
× RELATED வரும் முன் காப்போம்!