×

கடைக்காரர்களை மிரட்டி மாமூல் வசூலிப்பு; கொடுங்கையூர் ரவுடி கைது: பிரபல ரவுடி நாகேந்திரனின் கூட்டாளி

பெரம்பூர்: கடைக்காரர்கள், ஒப்பந்ததாரரர்களை மிரட்டி பணம் பறித்த ரவுடியை கைது செய்தனர். இவர் சிறையில் உள்ள பிரபல ரவுடி நாகேந்திரனின் கூட்டாளியாக செயல்பட்டுள்ளார். சென்னை கொடுங்கையூர், எருக்கஞ்சேரி சூழ்புனல்கரை பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் என்கின்ற வெள்ளை பிரகாஷ் (42). இவர் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட வேலூரில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள பிரபல ரவுடி நாகேந்திரனின் கூட்டாளி ஆவார். பிரகாஷ் மீது 3 கொலை உட்பட 13 வழக்குகள் உள்ளன. கடந்த 2 வருடத்துக்கு முன் கொடுங்கையூர் பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தநிலையில் கொடுங்கையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஒப்பந்ததாரர்களை மிரட்டி மாமூல் வசூல் செய்வதாக போலீசாருக்கு தெரியவந்தது. எருக்கஞ்சேரி சூழல்புனல்கரை பகுதியை சேர்ந்த மளிகை கடைக்காரர் பாண்டியராஜன் என்பவரை மிரட்டி பணம் பறித்துள்ளார். எம்கேபி. நகர் பகுதியில் ஜூஸ் கடை உரிமையாளரை மிரட்டியும் பணம் பறித்துள்ளார். இதுசம்பந்தமாக பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின்படி, கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வெள்ளை பிரகாஷை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post கடைக்காரர்களை மிரட்டி மாமூல் வசூலிப்பு; கொடுங்கையூர் ரவுடி கைது: பிரபல ரவுடி நாகேந்திரனின் கூட்டாளி appeared first on Dinakaran.

Tags : Tyrant Rawudi ,Rawudi Nagendran ,Perampur ,Rawudi ,Prakash ,Erukhanjeri, Kotungaiur, Chennai ,Baguajan ,Mamool ,Raudi Nagendran ,
× RELATED பார்க்கிங் பிரச்னையில் கத்தியை...