×

சுஜி அப்பம்

தேவையானவை:

வெள்ளை ரவை – 1 கப்,
மைதா மாவு – அரை கப்,
சர்க்கரை – 1¼ கப்,
வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்,
நெய் – 5 டேபிள்ஸ்பூன்,
ஏலப்பொடி – 1 டீஸ்பூன்,
நல்லெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
நெய் அல்லது எண்ணெய் – 5 டேபிள் ஸ்பூன்,
முந்திரி – 1 டீஸ்பூன்,
லெமன் ஃபுட் கலர் – 1 டீஸ்பூன்.

செய்முறை:

அடுப்பில் கனமான பாத்திரத்தில் 2 டேபிள் ஸ்பூன் நெய்விட்டு, முந்திரியை வறுத்து எடுத்து அதில் ரவையை பொன்னிறமாக வறுத்து ஒன்றரை கப் நீர் விட்டு வேக வைக்கவும். வெந்ததும் சர்க்கரை, ஃபுட் கலர், ஏலப்பொடி சேர்த்து கொட்டி பதம் வந்ததும் இறக்கவும். பூரணம் தயார்.ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சிறிது உப்பு, வெண்ணெய், நல்லெண்ணெய் விட்டு சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசையவும். மாவு அரைமணி நேரம் ஊறியபின் மாவை சிறு உருண்டை அளவு எடுத்து ஒரு வாழை இலையில் எண்ணெய் தடவி சப்பாத்தி மாதிரி தட்டி மேலே எலுமிச்சை அளவு உருட்டிய இனிப்புருண்டையை அதில் போளியாக தட்டியதைப் போட்டு ஓரங்களில் சிறிது எண்ணெய், நெய் கலந்த கலவையை ஊற்றி ஒரு புறம் வெந்ததும் திருப்பிப் போட்டு எடுக்கவும். சுவையான சுஜி அப்பம் தயார்.

The post சுஜி அப்பம் appeared first on Dinakaran.

Tags :
× RELATED வாழைப்பிஞ்சு பருப்பு உப்புமா