பாடாலூர்: பெரம்பலூர் அருகே வேப்பமரத்தில் திடீரென பால் வடிய ஆரம்பித்ததால் பெண்கள் திரண்டு வந்து பூஜை செய்து வழிபட்டனர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா இரூர் கிராமத்தில் உள்ள வயல் பகுதியில் வேப்பமரத்தில் இன்று காலை திடீரென்று பால் வடிய ஆரம்பித்தது. இதை பார்த்த அந்த பகுதியில் வயலுக்கு வேலைக்கு சென்ற பெண்கள் பரவசமடைந்தனர்.
இதுதெரிந்து அங்கு திரண்ட பெண்கள் உடனே அந்த மரத்தை சுற்றி மஞ்சள் தெளித்து வேப்பமரத்தில் மஞ்சள், சந்தனத்தை பூசி அதில் குங்கும பொட்டிட்டு விளக்கேற்றி, அபிஷேகம் செய்தும், கற்பூரம் காட்டியும் பூஜை செய்து வழிபட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரவியதால் சுற்று வட்டார கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வேப்ப மரத்தில் பால் வடிவதை பார்த்து பரவசமடைந்து வணங்கி சென்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பான சூழலாக நிலவியது.
The post பெரம்பலூர் அருகே வேப்ப மரத்தில் பால் வடியும் அதிசயம் பொதுமக்கள் வழிபாடு appeared first on Dinakaran.