×
Saravana Stores

போன்பே மோசடி-நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: மோசடியாக போன்பே செயலியை பயன்படுத்தி பண பரிவர்த்தனை செய்யும் நிறுவனத்தை முடக்க ஒன்றிய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. தங்கள் நிறுவனத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி சிலர் பண பரிவர்த்தனை செய்வதாக போன்பே நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது பேசிய நீதிபதிகள், சம்பந்தப்பட்ட பணப்பரிவர்த்தனைக்கான யூ.ஆர்.எல். கணக்கு ஐடியை ஒன்றிய அரசுக்கு போன்பே நிறுவனம் தர வேண்டும். தொடர்ந்து பணப்பரிவர்த்தனை செய்யாத வகையில் யுஆர்எல் கணக்கு ஐடியை முடக்க நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவிட்ட நிலையில், எந்த நிறுவனம் பண மோசடியில் ஈடுபட்டது என உறுதி செய்யப்பட்டதும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றிய அரசு பதில் தெரிவித்துள்ளது.

The post போன்பே மோசடி-நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் ஆணை..!! appeared first on Dinakaran.

Tags : iCourt ,EU ,Bonpay ,Chennai ,Chennai High Court ,EU government ,Bonbay ,Dinakaran ,
× RELATED சட்ட விரோத குவாரிகள் தொடர்பாக புகார்...