சென்னை: தமிழ்நாட்டில் நவம்பர். 6, 7, 8, 9, 10, 12 ஆகிய 6 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கனமழைக்கு வாய்ப்பு என்பதால் நவம்பர்.6, 7, 8, 9, 10, 12 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டிற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்துவருவதை அடுத்து, பரவலாக மழை பெய்துவருகிறது. குறிப்பாக தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நேற்று கனமழை பெய்துள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் சராசரியாக 90 டிகிரி அளவில் வெப்பநிலை இருந்தது.
இதற்கிடையே, மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய இலங்கபை் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும், தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலை கொண்டுள்ளன. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
7ம் தேதி கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. மேலும் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், 8ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளது
9ம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.
சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. வெப்பநிலையை பொருத்தவரையில் 90 டிகிரி வரை இருக்கும். மேலும், வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் 7ம் தேதியில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்திலும், 8ம் தேதியில் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்திலும் வீசும்
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 13 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. அக்டோபர் 1-ம் தேதி முதல் இன்று காலை வரை 219.6 மி.மீ. பெய்ய வேண்டிய நிலையில் 247.4 மி.மீ. மழை பெய்துள்ளது. சென்னையில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 7% கூடுதலாக பெய்துள்ளது.
The post தமிழ்நாட்டில் 6 நாட்கள் கனமழை 7 நாட்கள் மிதமான மழை: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.