- காங்கிரஸ் குழு
- தலைவன்
- பாலக்காடு
- மாவட்டம்
- கிம்மன் மண்டல விவசாயிகள் காங்கிரஸ் கமிட்டி
- சட்டசபை
- ரமேஷ் சென்னத்தலா
பாலக்காடு, நவ. 6: பாலக்காடு மாவட்டம் கண்ணாடி மண்டலம் விவசாயி காங்கிரஸ் கமிட்டியின் குடும்ப மேளா நடைபெற்றது. இந்த மேளாவை முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா தொடங்கி வைத்து பேசினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது: பாலக்காடு மாவட்டத்தில் விவசாயிகள் அதிகளவில் நெல்பயிர் விவசாயம் செய்து வாழ்வாதாரம் நிலைநாட்டி வருகின்றனர். இவர்கள் விளைவுக்கும் நெல்லுக்கு கொள்முதல் விலை 35 ரூபாயாக உயர்த்த வேண்டும், இவர்களில் குடோனில் கொள்முதல் செய்தவுடன் இவர்களது வங்கி கணக்கில் பணம் உடனடியாக பட்டுவாடா செய்ய வேண்டும், மாநில அரசு கிடங்குகளில் நெல் கொள்முதல் செய்தால் பணம் பட்டுவாடா செய்வதற்கு அதிகாரிகள் தாமதம் செய்வதை சரி செய்யவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
விவசாய காங்கிரஸ் கமிட்டியினர் அனைவரும் பாலக்காட்டில் நடைபெறும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் மாங்கூட்டத்திற்கு வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தினார். முன்னதாக நிகழ்ச்சிக்கு விவசாய காங்கிரஸ் மாவட்ட தலைவர் இக்பால் தலைமை வகித்தார். கேரள பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் அஜய், தலைவர் அனில்போஸ், டோணி, மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கப்பன், துணைத் தலைவர் பாபு, சிவராஜன், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களான ப்ரீத், பத்மகீரிஷ், சீவர்கீஸ் ஆகியோர் பேசினர்.
The post காங்கிரஸ் கமிட்டி குடும்ப மேளாவை முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.