×

கனமழையால் சேதம் அடைந்த சாலையை கலெக்டர் ஆய்வு

குன்னூர், நவ. 6: நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது இதன் காரணமாக பல்வேறு இடங்களில் மண் சரிவு மற்றும் மரங்கள் விழுதல் உள்ளிட்ட இடர்பாடுகள் ஏற்பட்டன இவற்றை தீயணைப்புத்துறையினர் உடனுக்குடன் அகற்றி சீரமைத்தனர். இதனிடையே கடந்த 2 தினங்களுக்கு முன்பு குன்னூரில் பெய்த மழையின் காரணமாக ஸ்டேன்ஸ் பள்ளி அருகில் 20 அடி உயர தடுப்புச் சுவர் சேதம் அடைந்து இடிந்து விழுந்தது. இதேபோல் பில்லூர் மட்டம் முதல் யானை பள்ளம் செல்லும் சாலை பலத்த சேதம் அடைந்தது.

இந்நிலையில் நேற்று மாலை மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தடுப்பு சுவர் இடிந்து விழுந்த பகுதியையும், மழையினால் சேதம் அடைந்துள்ள பில்லூர் மட்டம், யானை பள்ளம் சாலையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடனடியாக உலிக்கல் பேரூராட்சி மூலம் சாலை மேலும் சேதம் அடையாமல் இருக்கவும், மக்களுக்கு போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும் வகையில் மணல் மூட்டை அடுக்கி தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், குன்னூர் சார் ஆட்சியர் சங்கீதா, குன்னூர் வட்டாட்சியர் கனி சுந்தரம் உட்பட பலர் உடன் இருந்தனர்.

The post கனமழையால் சேதம் அடைந்த சாலையை கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Coonoor ,Nilgiri ,
× RELATED குன்னூரில் புதர் மண்டிக்கிடக்கும் ஓடைகள் சீரமைப்பு பணி தீவிரம்