×

கவர்ச்சி ஆப் மூலம் அழைத்து ஆப்பு; இளம்பெண்களிடம் உல்லாசம் தேடி வந்த தொழிலதிபரை மிரட்டி ஓரினசேர்க்கை: நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து பல லட்சம் பறித்த கும்பல்

ஆரல்வாய்மொழி: குமரியில் இளம்பெண்கள் இருப்பதாக கவர்ச்சி ஆப் மூலம் உல்லாசத்துக்கு அழைத்து தொழிலதிபரை மிரட்டி ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தி, ஆபாசமாக வீடியோ எடுத்து லட்சக்கணக்கில் பணத்தை இளைஞர் கும்பல் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கவர்ச்சி செயலி (ஆப்) மூலம் இளைஞர்களுடன் பழகி அவர்களின் ஆசையை தூண்டி தனியாக வரவழைத்து பணம், நகைகள் பறிக்கும் கும்பல், குமரி மாவட்டத்தில் தொடர்ந்து கைவரிசை காட்டி வருகிறது. இந்நிலையில் ஆரல்வாய்மொழி அருகே இளம் தொழிலதிபர் ஒருவர், இந்த கும்பலால் ஏமாற்றப்பட்டுள்ளார். கிரைன்டர் என்கிற ஆபாச செயலியில் சாட்டிங் செய்த போது அவருக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் தொடர்பு கொள்ள அழகான இளம்பெண்களின் புகைப்படங்களை காட்டி சாட்டிங் செய்ய வைத்தனர். பின்னர் இளம்பெண் குரலில் பேசியும் வந்துள்ளனர். கவர்ச்சியாக பேசியதில் இளம் தொழிலதிபருக்கு உல்லாசம் அனுபவிக்கும் ஆசை வந்தது. உடனே அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அவரின் ஆசையை அதிகரிக்கும் வகையில் மெசேஜ், போட்டோக்களை அனுப்பினர்.

கடந்த சில நாட்களுக்கு முன், ஆரல்வாய்மொழி அருகே நாகர்கோவில் – காவல் கிணறு நான்கு வழிச்சாலையில் ஒரு பகுதியை கூறி அங்கு வந்தால் இளம்பெண்களுடன் ஜாலியாக இருக்கலாம் என கூறி அழைப்பு வந்தது. அந்த இளம் தொழிலதிபரும், அந்த பகுதிக்கு செல்ல, மறைந்திருந்த கும்பல் அந்த வாலிபரை சுற்றி வளைத்தது. முதலில் அவரது ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி போட்டோக்கள், வீடியோக்கள் எடுத்தனர். இதை வெளியே கூறினால், நெட்டில் பரப்பி விடுவோம் என மிரட்டினர். அப்போதுதான் அவர்கள் ஓரின சேர்க்கை கும்பல் என்பது தொழிலதிபருக்கு தெரிய வந்தது. அவரை நிர்வாணமாக்கிய பின், அந்த கும்பலில் இருந்த இரு வாலிபர்கள் தங்களது ஆசைகளை அவரிடம் தீர்த்தனர். அதையும் வீடியோ எடுத்தனர். பின்னர் அந்த தொழிலதிபர் வைத்திருந்த ரூ.2 லட்சத்தையும் பறித்து விட்டு மிரட்டி அனுப்பினர். இளம்பெண்கள் மீதான ஆசையில் வந்தவர், பணத்தையும் இழந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஓடி சென்றார். இது தொடர்பாக ஆரல்வாய்மொழி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.இதன் பேரில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

 

The post கவர்ச்சி ஆப் மூலம் அழைத்து ஆப்பு; இளம்பெண்களிடம் உல்லாசம் தேடி வந்த தொழிலதிபரை மிரட்டி ஓரினசேர்க்கை: நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து பல லட்சம் பறித்த கும்பல் appeared first on Dinakaran.

Tags : Kumari ,Dinakaran ,
× RELATED திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்