×

பயோட்டின் பவுடர்

தேவையானவை

நட்ஸ் வகைகள் (பாதாம், வேர்க்கடலை, சூரியகாந்தி விதைகள் மற்றும் அக்ரூட் பருப்புகள்) -அரை கப்
ஓட்ஸ் அல்லது பார்லி – அரை கப்
வெள்ளை கொண்டைக்கடலை அல்லது வெள்ளை உளுந்து – அரை கப்
சியா விதைகள், ஆளி விதைகள் – அரை கப்.

செய்முறை:

பாதாம், வேர்க்கடலை, சூரியகாந்தி விதைகள் மற்றும் அக்ரூட் பருப்புகளை பொடியாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்து எடுத்துக் கொள்ளவும். அதேபோல், கொண்டைக்கடலை அல்லது உளுந்தை மிதமான தீயில் வறுத்து ஆறவைத்து அதனையும் அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும். அதேபோல், ஓட்ஸ் மற்றும் பார்லி, ஆளி விதைகள் மற்றும் சியா விதைகளை தனித்தனியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு சுத்தமான பாத்திரத்தில் அரைத்து வைத்திருக்கும் அனைத்து பொடிகளையும் போட்டு ஒன்றாக கலந்து கொள்ளவும். பயோட்டின் பவுடர் தயார்.

 

The post பயோட்டின் பவுடர் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED வரும் முன் காப்போம்!