×

மேட்டுப்பாளையத்தில் குப்பைகளை தரம் பிரித்து வழங்கிய பொது மக்களுக்கு பரிசு

 

மேட்டுப்பாளையம்,அக்.29:மேட்டுப்பாளையம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும் குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைத்தால் தீபாவளி பரிசு காத்திருக்கிறது என நகராட்சி நிர்வாகம் அறிவித்தது. நேற்று 4 வது வார்டுக்குட்பட்ட மதீனா நகர், எல்.எஸ்.புரம் பகுதிகளில் தூய்மை பணியாளர்களிடம் தரம் பிரித்த குப்பைகளை வழங்கிய பொதுமக்களுக்கு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. நகராட்சி கமிஷனர் அமுதா,நகர்மன்ற தலைவர் மெஹரீபா பர்வீன் அஷ்ரப் அலி, கவுன்சிலர் சுனில்குமார் உள்ளிட்டோர் பொதுமக்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர்.

அப்போது,சுகாதார ஆய்வாளர் மகாராஜன், ரவிசங்கர்,தூய்மை பணியாளர்கள் உடனிருந்தனர். நகராட்சி கமிஷனர் அமுதா பேசுகையில்:தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை,இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.பொதுமக்கள் குறைந்த ஒலியுடன்,குறைந்த அளவில் காற்று மாசு ஏற்படுத்தும் தன்மை கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அப்பகுதியில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். எனவே,பொதுமக்கள் இந்த அறிவுரைகளை பின்பற்ற வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

The post மேட்டுப்பாளையத்தில் குப்பைகளை தரம் பிரித்து வழங்கிய பொது மக்களுக்கு பரிசு appeared first on Dinakaran.

Tags : Mettupalayam ,Diwali ,Madina ,
× RELATED மாற்றுத்திறனாளி குழந்தைகளோடு புத்தாண்டு விழா கொண்டாட்டம்