×

ஜப்திக்கு வந்த வீட்டை போக்கியத்துக்கு விட்டு ரூ.3.5 லட்சம் மோசடி

 

புதுச்சேரி, நவ. 5: புதுவை அரியாங்குப்பம் சின்னசாமிமுதலியார் தெருவை சேர்ந்தவர் பாத்திமா (44). இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நைனார்மண்டபம் மூகாம்பிகை நகரில் உள்ள ஒரு வீட்டை பார்த்துள்ளார். அந்த வீட்டின் உரிமையாளரான கோலாஸ் நகரை சேர்ந்த சார்லஸ் என்பவரை பாத்திமா தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது சார்லஸ் வீட்டை 11 மாதத்துக்கு போக்கியத்துக்கு ரூ.3.5 லட்சம் தருவதாக கூறியுள்ளார். அதன்படி பாத்திமா ரூ.3.5 லட்சத்தை கொடுத்துள்ளார்.

பின்னர் 1 வாரத்திற்குள் வீட்டை சீர் செய்து தருவதாக சார்லஸ் உறுதி அளித்துள்ளார். அதன்பிறகு பாத்திமா அந்த வீட்டுக்கு சென்று பார்த்தபோது, தனியார் வங்கியின் ஜப்தி நோட்டீஸ் வீட்டில் ஒட்டப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன் பிறகு சார்லசை தொடர்பு கொள்ள முயன்றபோது முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பாத்திமா இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சார்லஸை தேடி வருகின்றனர்.

The post ஜப்திக்கு வந்த வீட்டை போக்கியத்துக்கு விட்டு ரூ.3.5 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Fatima ,Chinnasamymudiyar Street, Ariyanguppam, Puduvai ,Nainarmandapam Moogambikai ,Charles ,Golas ,Bokkiam ,
× RELATED கடலூர்- புதுச்சேரி எல்லைப் பகுதியில்...