×

வடவம் பாக்கெட் தயாரிக்கும் குடோனில் தீ விபத்து

 

கடலூர், நவ. 5: கடலூர் முதுநகர் அருகே வடவம் பாக்கெட் தயாரிப்பு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள தாளிப்பு வடகம் மூட்டைகள் எரிந்து சேதம் அடைந்தன. கடலூர் முதுநகர் இருசப்பன் தெருவை சேர்ந்தவர் கோபிநாத் (30). இவர் சுத்துக்குளம் பகுதியில் வடவம் பாக்கெட் தயாரிக்கும் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை நிறுவனத்தை பூட்டி விட்டு வீட்டிற்கு வந்து விட்டார்.

மீண்டும் நேற்று காலை அங்கு சென்று பார்த்தபோது வடவம் பாக்கெட் மூட்டைகள் வைத்திருந்த குடோனில் இருந்து புகை வெளியே வந்துள்ளது. இதன் பின்னர் கதவை திறந்து பார்த்தபோது அங்கு வைத்திருந்த 150 மூட்டைகள் எரிந்து வடவம் அனைத்தும் சேதமாகி இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். சேதம் அடைந்த வடவம் மூட்டைகளின் மதிப்பு ரூ.8 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வடவம் பாக்கெட் தயாரிக்கும் குடோனில் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Vadavam ,Cuddalore ,Cuddalore Muthunagar ,Thalipu Vadagam ,Gopinath ,Irusappan Street, Cuddalore Muthunagar.… ,Dinakaran ,
× RELATED கடலூர் கலெக்டர் அலுவலகத்தில்...