போடி, நவ. 5: போடி டி.வி.கே.கே நகரில் உள்ள வர்த்தகர்கள் சங்க மண்டபத்தில் போடி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போடி தாலுகா குழுவின் 9வது மாநாடு நேற்று போடி தாலுகா செயலாளர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட குழு எஸ்.கே.பாண்டியன் முன்னிலை வகித்தார். தாலுகா குழு சந்திரசேகர் வரவேற்றார். முன்னதாக மாநாட்டுக் கொடியை காந்தி ஏற்றினார். மாவட்டச் செயலாளர் செல்வராஜ் மாநாட்டை துவக்கி வைத்தார். மாநாட்டில், போடியிலிருந்து சென்னைக்கு கூடுதலாக தினந்தோறும் இயக்கப்பட வேண்டும்,
மேலும் போடியில் இருந்து புதிய போக்குவரத்தாக கோயம்புத்தூர், ராமேஸ்வரம், நாகர்கோவில் போன்ற பகுதிகளுக்கு ரயில் இயக்கப்பட வேண்டும், போடி நகர் பகுதியில் அதிக அளவு போக்குவரத்து வாகனங்களும் பொதுமக்களுக்கும் நெருக்கடியால் பாதிப்படைத்து வருகின்றனர். போக்கிடும் விதமாக விரைவில் போடியில் புறவழிச்சாலை அமைக்கப்பட வேண்டும் என்றும், போடியில் நடந்து வரும் ரயில்வே மேம்பால பணிகள் விரைந்து முடிக்க வேண்டும், உட்பட பத்து கோரிக்கைகள் தீர்மான மாக நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில் லெனின், வெண்ணிலா, முனீஸ்வரன், பால பாரதி, மீனா உட்பட தாலுகா அளவில் கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டனர்.
The post போடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா மாநாடு appeared first on Dinakaran.