மண்டபம் பகுதியில் வெளுத்து வாங்கிய கனமழை

மண்டபம்,நவ.5: மண்டபம் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை வெளுத்து வாங்கியதால், இந்த பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். மண்டபம் பேரூராட்சி மற்றும் மண்டபம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மரைக்காயர் பட்டிணம், வேதாளை, சாத்தக்கோன்வலசை, பிரப்பன்வலசை, நொச்சுயூரணி, மானாங்குடி புதுமடம், தாமரைக் குளம், இரட்டையூரணி, காரான், கும்பரம், கோரவல்லி, வெள்ளரி ஒடை, பெருங்குளம், ஆற்றங்கரை, அழகன்குளம், பனைக்குளம், புதுவலசை தேர்போகி, நாகாச்சி,செம்படையார்குளம், என்மனம் கொண்டான், இருமேனி ஆகிய 23 ஊராட்சிகளில் சனிக்கிழமை இரவும், ஞாயிற்றுக்கிழமை இரவும் கனமழை பெய்தது.

பல நாட்களாக மழைக்காக ஏங்கி இருந்த இந்த பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் கனவு பெய்த கனமழையால், பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த பகுதிகளில் தென்னை மரம் விவசாயம் அதிகமாக உள்ளது. அதுபோல பசுமையான புல் தரைகளும் அதிகமாக காணப்படும். இதனால் தஞ்சாவூர் மாவட்ட பகுதிகளில் இருந்து இந்த, செப்டம்பர் அக்டோபர், நவம்பர்,டிசம்பர் ஆகிய நான்கு மாதங்களுக்கு ஆடு வளர்ப்பதற்கு ஆட்டு வியாபாரிகள் ஆயிரக்கணக்கான ஆடுகளை இந்த பகுதிகளுக்கு அழைத்து வருவார்கள். ஆட்டு வியாபாரிகள் புல் தரவை பகுதிகளில் தனியார் இடத்தில் நூற்றுக்கணக்கான ஆடுகள் ஒரே இடத்தில் தங்கும் அளவிற்கு பல இடங்களில் ஆட்டு கூடாரம் அமைப்பார்கள். அதன் பின்னர் இரவு ஆடுகளை தங்க வைத்து பகலில் அருகேயுள்ள தரவை பகுதிகளில் அழைத்து செல்வார்கள். ஆடு வளர்ப்பு முறையும், இந்த பகுதிகளில் உள்ளது.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பல பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஆனால் இந்த பகுதிகளுக்கு உட்பட்ட இடங்களில் திடீரென மழை பெய்யும். திடீரென மழையே பெய்யாது. இதனால் பொதுமக்கள் பெரும் ஏமாற்றத்துடன் கவலை அடைந்து வந்தனர். இந்த ஆண்டு மழை பெய்ய வில்லை என்றால், தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. ஆனால் இந்த அச்சத்தை கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் தீர்வு கிடைத்தது. மேலும் இந்த பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை எதுவும் பாதிக்க வில்லை.

The post மண்டபம் பகுதியில் வெளுத்து வாங்கிய கனமழை appeared first on Dinakaran.

Related Stories: