நீடாமங்கலம் முருகர் கோயில்களில் கந்த சஷ்டி சிறப்பு வழிபாடு

 

நீடாமங்கலம், நவ.6: நீடாமங்கலம் பகுதி முருகர் கோயில்களில் கந்தசஷ்டிவிழா சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகின்றன. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கீழத்தெருவில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் முருகன்கோவிலில் கந்தசஷ்டிவிழாவையொட்டி சத்ருசம்காரதிரிசதி யாகம் நடந்தது. அதே போன்று நீடாமங்கலத்தில் எழுந்தருளிஅருள்பாலித்து வரும் கோகமுகேஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி விழாவின் மூன்றாம் நாளான நேற்று முன்தினம் இரவு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு வள்ளி,தெய்வானை சமேத சுப்பிரமணியர் அருள் பாலித்தனர்.இதே போன்று நீடாமங்கலம் அருகில் உள்ள பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோயிலிலும் அருள் மிகு வள்ளி,தேவசேனா உடனுறை சுப்பிரமணிய பெருமானுக்கும் கந்த சஷ்டி விழா நடந்து வருகிறது. இக்கோயில்களில் தினந்தோறும் சிறப்பு அபிஷேக ஆராதனையும் சுவாமி புறப்பாடும் நடந்து வருகிறது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிஷனம் செய்தனர்.

 

The post நீடாமங்கலம் முருகர் கோயில்களில் கந்த சஷ்டி சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: