தீவிரவாதிகளுடன் தொடர்பு; துருக்கியில் குர்த் இன மேயர்கள் 3 பேரின் பதவி பறிப்பு

அங்காரா: துருக்கியில், மார்டின், பேட்மேன், ஹல்பெடி நகரங்களில் குர்த் இன மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இந்த இனத்தவர் அரசுக்கு எதிராக 40 ஆண்டுகாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு எதிராக ராணுவத்தினர் நடத்திய தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். இந்த பிரச்னைக்கு தீர்வு காண அரசு பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதற்கிடையே, கடந்த மார்ச்சில் நடந்த மேயர் பதவிகளுக்கான தேர்தலில், மார்டின், பேட்மேன், ஹல்பெடி நகரங்களின் மேயர்களாக குர்த் இனத்தை சேர்ந்தோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவர்கள், குர்த் இனத்தவர்களுக்கு ஆதரவாக செயல்படும் சமத்துவ ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள். இக்கட்சி, துருக்கியில் மூன்றாவது பெரிய கட்சியாக திகழ்கிறது. இந்நிலையில், தடை செய்யப்பட்ட குர்திஸ்தான் தீவிரவாத குழுவுடன் இவர்களுக்கு தொடர்புள்ளதாக கூறி, அவர்களை துருக்கி அரசு நேற்று பதவி நீக்கம் செய்துள்ளது. அவர்களுக்கு பதிலாக, அப்பதவிகளில் அரசு அதிகாரிகள் மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

The post தீவிரவாதிகளுடன் தொடர்பு; துருக்கியில் குர்த் இன மேயர்கள் 3 பேரின் பதவி பறிப்பு appeared first on Dinakaran.

Related Stories: