ராணுவ பயன்பாட்டுக்கு உதவும் நவீன செயற்கைக்கோளை ஜப்பான் ஏவியது


டோக்கியோ: ராணுவ பயன்பாட்டுக்கு உதவும் அதிநவீன செயற்கைக் கோளை, ஜப்பான் விஞ்ஞானிகள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தி உள்ளனர். ஜப்பானை சுற்றியுள்ள பிராந்தியத்தில் சமீப காலமாக பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால், ராணுவ பலத்தை அதிகரிக்கும் நோக்கில், அதிநவீன செயற்கைக் கோளை ஜப்பான் ஏரோஸ்பேஸ் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர்.

கிராமேகி எனப் பெயரிடப்பட்ட இந்த செயற்கைக் கோள், ஜப்பானின் தென்மேற்கே அமைந்துள்ள தீவில் உள்ள டனேகஸிமா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து, எச்3 ரக ராக்கெட் மூலம் நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. சிறிது நேரத்தில் அந்த செயற்கைக்கோள் குறிப்பிட்ட சுற்று வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.

The post ராணுவ பயன்பாட்டுக்கு உதவும் நவீன செயற்கைக்கோளை ஜப்பான் ஏவியது appeared first on Dinakaran.

Related Stories: