×

தீபாவளி முடிந்ததால் சென்னை திரும்ப 12,846 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: இன்று முதல் போக்குவரத்துத்துறை ஏற்பாடு

சென்னை: தீபாவளி பண்டிகை முடித்துவிட்டு சென்னை திரும்புவதற்காக 12,846 பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகிறது என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்று முன் தினம் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கும் அதனை தொடர்ந்து நேற்று, இன்று மற்றும் நாளை என தொடர் விடுமுறை என்பதால் லட்சக்கணக்கான மக்கள் சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊருக்கு படையெடுத்தனர். இதனை கருத்தில் கொண்டு சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பிற நகரங்களில் வசிக்கும் மக்கள், பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்வதற்காக தமிழக அரசு சார்பில் கடந்த 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

வியாழக்கிழமை தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து ஏராளமான மக்கள் திங்கட்கிழமையில் இருந்து சொந்த ஊர் செல்ல ஆரம்பித்தனர். இவர்கள் வசதிகாக 10,784 பேருந்துகள் பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்பட்டன. சிறப்பு பேருந்துகள் மூலம் 5.76 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முடித்துவிட்டு இன்று முதல் ஞாயிறு வரை சென்னைக்கு திரும்புவார்கள். இதனை கருத்தில் கொண்டு இன்று முதல் 4ம் தேதி வரை (சனி, ஞாயிறு மற்றும் திங்கள்) 12,846 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. குறிப்பாக பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு 3,165 சிறப்பு பேருந்தும், சென்னையை தவிர்த்து இதர இடங்களுக்கு 3,405 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

The post தீபாவளி முடிந்ததால் சென்னை திரும்ப 12,846 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: இன்று முதல் போக்குவரத்துத்துறை ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Diwali ,Diwali festival ,Tamil Nadu ,
× RELATED மீனாட்சி படம் திருட்டு கதையா?