×

திருப்போரூர், திருத்தணி, சிறுவாபுரி கோயிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது: திரளான பக்தர்கள் தரிசனம்

திருப்போரூர்: திருப்போரூர், திருத்தணி, சிறுவாபுரி முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். புகழ் பெற்ற முருக பெருமான் கோயில்களில் ஒன்றான திருப்போரூர் கந்தசுவாமி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா இன்று காலை 5.30 மணியளவில் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து பல்லக்கு உற்சவம் நடந்தது. இன்றிரவு 7 மணியளவில் கிளி வாகனத்தில் முருகப்பெருமானின் வீதியுலா நடைபெறுகிறது. இன்று காலை கோயிலில் நடைபெற்ற கொடியேற்ற உற்சவத்தில் திருப்போரூர் ஒன்றிய குழுத்தலைவர் எல்.இதயவர்மன், பேரூராட்சி தலைவர் தேவராஜ், துணை தலைவர் பரசுராமன், கவுன்சிலர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, நாளை இரவு ஆட்டுக்கிடா வாகனத்திலும், நாளை மறுநாள் இரவு புருஷாமிருக வாகனத்திலும், 5ம் தேதி இரவு பூத வாகனத்திலும், 6ம் தேதி இரவு வெள்ளி அன்ன வாகனத்திலும் முருகப்பெருமானின் வீதியுலா நடைபெறுகிறது.

முக்கிய நிகழ்ச்சியான சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்யும் கந்த சஷ்டி விழா, வரும் 7ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. அன்றைய தினம் வெள்ளி குதிரை வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி, தங்கவேல் கொண்டு சூரபத்மனை வதம் செய்கிறார். அன்றிரவு தங்க மயில் வாகனத்தில் முருகப் பெருமானின் வீதியுலா நடைபெறுகிறது. 8ம் தேதி மாலை 6 மணியளவில் முருகப்பெருமானின் திருக்கல்யாண உற்சவமும், யானை வாகனத்தில் வீதியுலாவும் நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு நாள்தோறும் லட்சார்ச்சனை நடைபெறுகிறது. இதற்கு கட்டணமாக ₹400 வசூலிக்கப்படுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கார்த்திகேயன், செயல் அலுவலர் குமரவேல் ஆகியோர் தலைமையில் விழா குழுவினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

சிறுவாபுரி: பெரியபாளையம் அருகே சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று காலை கொடியேற்றத்துடன் கந்த சஷ்டி விழா நிகழ்ச்சிகள் கோலாகலமாக துவங்கியது. முன்னதாக, அதிகாலை பாலசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து, மேளதாளங்கள் முழங்க ஆலயத்தை வலம் வந்தார். பின்னர், அங்கு கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றினர். தொடர்ந்து பாலசுப்பிரமணிய சுவாமிக்கு தீப, தூப ஆராதனைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அரோகரா கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர். விழா நடைபெறும் 6 நாட்களும் முருகப்பெருமானுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடக்கின்றன. முக்கிய நிகழ்ச்சியாக வரும் 7ம் தேதி மாலை சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்யும் சூரசம்ஹார விழா நடைபெறுகிறது. நிறைவாக, 8ம் தேதி) வள்ளி, தெய்வானை சமேதராக முருகப்பெருமானின் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் உள்பட கோயில் நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

திருத்தணி: முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக திகழும் திருத்தணி சுப்பிரமணிய கோயிலில் கந்தசஷ்டி விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி இன்று அதிகாலையில் மூலவருக்கு புஷ்ப அலங்காரம் நடந்தது. காலை 8 மணிளயவில் காவடி மண்டபத்தில் வள்ளி, தெய்வானை சமேதராக சண்முகருக்கு சிறப்பு அலங்காரம், ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு, மகாதீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் வழிபட்டனர். தொடர்ந்து, கோயில் அர்ச்சகர்கள் குழுவினரின் லட்சார்ச்சனை துவங்கியது. விழா நடைபெறும் 7 நாட்களுக்கு காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை லட்சார்ச்சனை நடைபெறுகிறது. கோயில் அறங்காவலர் குழு தலைவர் தரன், இணை ஆணையர் ரமணி, அறங்காவலர்கள் சுரேஷ்பாபு, நாகன், மோகனன், உஷாரவி ஆகியோர் விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்து வருகின்றனர். இதில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் திருத்தணி எம்.பூபதி, நகர செயலாளர் வினோத்குமார் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

முக்கிய நிகழ்ச்சியான சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்யும் கந்த சஷ்டி விழா, வரும் 7ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. அன்றைய தினம் வெள்ளி குதிரை வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி, தங்கவேல் கொண்டு சூரபத்மனை வதம் செய்கிறார். அன்றிரவு தங்க மயில் வாகனத்தில் முருகப் பெருமானின் வீதியுலா நடைபெறுகிறது. 8ம் தேதி மாலை 6 மணியளவில் முருகப்பெருமானின் திருக்கல்யாண உற்சவமும், யானை வாகனத்தில் வீதியுலாவும் நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு நாள்தோறும் லட்சார்ச்சனை நடைபெறுகிறது. இதற்கு கட்டணமாக ₹400 வசூலிக்கப்படுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கார்த்திகேயன், செயல் அலுவலர் குமரவேல் ஆகியோர் தலைமையில் விழா குழுவினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

The post திருப்போரூர், திருத்தணி, சிறுவாபுரி கோயிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது: திரளான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Tiruporur, Tiruthani, Siruvapuri Temple Kanda Shashti Festival ,Tiruporur ,Kanda Shashti festival ,Tiruthani ,Siruvapuri Murugan Temples ,Tiruporur Kandaswamy Murugan Temple ,Lord Muruga ,Tiruthani, Siruvapuri Temple Kandhashashti ceremony ,
× RELATED திருப்போரூர் பேரூராட்சியில் உள்ள கழிப்பறைகளை சீரமைக்க கோரிக்கை