×

மெல்ல மெல்ல குறையும் தங்கம் விலை: சென்னையில் சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.58,960க்கு விற்பனை.! வாடிக்கையாளர்கள் நிம்மதி

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.7,370க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.106க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்தது என்பதும் குறிப்பாக கடந்த வாரம் தங்கம் விலை மிக அதிகமாக உயர்ந்ததால் 60 ஆயிரத்தை ஒரு சவரன் நெருங்கியது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் நேற்று உன்றும் தங்கம் விலை குறைந்துள்ளதை அடுத்து 59 ஆயிரத்துக்கும் கீழே தங்கம் விலை விற்பனை ஆகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.

சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம். சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ரூபாய் 7,370 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 120 குறைந்து ரூபாய் 58,960 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,875 எனவும் ஒரு சவரன் ரூபாய் 63,000 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 106.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 106,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது

The post மெல்ல மெல்ல குறையும் தங்கம் விலை: சென்னையில் சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.58,960க்கு விற்பனை.! வாடிக்கையாளர்கள் நிம்மதி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Shavaran ,Dinakaran ,
× RELATED மீனவர் வீட்டில் 11 சவரன் நகை, ரூ.2 லட்சம் கொள்ளை!!