×

வெரைட்டி பர்ஃபி

தேவையானவை:

சர்க்கரை – 250 கிராம்,
காய்ச்சிய பால் – ¼ லிட்டர்,
நெய் – 300 கிராம்,
தேங்காய் – ½ மூடி (துருவியது,
வேர்க்கடலை – வறுத்து தோல் நீக்கி மாவாக அரைத்தது 2 கப்,
வறுத்த மாவாக்கிய ரவை – 4 டீஸ்பூன்,
நெய்யில் வறுத்த முந்திரி – 10.

செய்முறை:

அடுப்பில் அடிகனமான பாத்திரம் வைத்து அதில் அரைத்த வேர்க்கடலை, ரவை, சர்க்கரை, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கலந்து பிறகு பால் ஊற்றி கைவிடாமல் கிளறவும். சிறிது விட்டுச் சுருண்டு மேலே பூத்து வரும். பாத்திரத்தில் ஒட்டாமல் நெய் மிதந்து வரும் போது நெய்தடவிய ஒரு தட்டில் கொட்டவும். பிறகு ஆறியதும் டைமண்ட் ஷேப்பில் வில்லைகள் போடவும். முந்திரியை சின்னச் சின்னதாக உடைத்து தட்டில் கொட்டிய பர்ஃபியின் மேல் வைத்து அழுத்தவும். வெரைட்டி பர்ஃபி ரெடி.

The post வெரைட்டி பர்ஃபி appeared first on Dinakaran.

Tags : Variety Purfi ,
× RELATED உப்பு கார உருண்டை