திருவிதாங்கூர் மன்னரின் இவ்வருட பிறந்தநாள் இன்று ஆகும். இதை முன்னிட்டு நேற்று மாலை 5 மணிக்கு சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. தந்திரி பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறந்தார். நேற்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை.
இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், உஷபூஜை உள்பட வழக்கமான பூஜைகளுடன் உதயாஸ்தமய பூஜை, படிபூஜை உள்பட சிறப்பு பூஜைகளும் நடைபெறும். காலை 10 மணி வரை நெய்யபிஷேகமும் நடைபெறும். இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். மீண்டும் மண்டல கால பூஜைகளுக்காக நவம்பர் 15ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும்.நேற்று மாலை நடை திறப்பை முன்னிட்டு சபரிமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்திருந்தனர்.
The post சித்திரை ஆட்டத்திருநாள் பூஜை சபரிமலை கோயில் நடை திறப்பு appeared first on Dinakaran.