சிறுமி பலாத்காரம் செய்து எரித்துக் கொலை முறையாக வழக்கை விசாரிக்காத பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

நாகப்பட்டினம்: சிறுமியை பலாத்காரம் செய்து எரித்துக் கொலை செய்த வழக்கை முறையாக விசாரிக்காத பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை சேர்ந்தவர் 13வயது சிறுமி. 9ம் வகுப்பு படித்து வந்தார். தாய் இறந்து விட்டதால் சித்தப்பா பாலகிருஷ்ணன் பாதுகாப்பில் வளர்ந்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 29ம்தேதி வேளாங்கண்ணி பேராலயத்தில் நடந்த திருவிழாவில் பரத நாட்டியம் ஆடிவிட்டு வீடு திரும்பினார்.

சிறுமியின் சித்தப்பா குடும்பத்தினர் வெளியூர் சென்றிருந்ததால் வீட்டில் தனியாக இருந்த சிறுமி மறுநாள் 30ம்தேதி வீட்டின் மொட்டை மாடியில் எரிந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். வேளாங்கண்ணி போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். சிறுமி இறப்பு குறித்து இன்ஸ்பெக்டர் விசித்ராமேரி சரியான முறையில் விசாரணை செய்யவில்லை என உறவினர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியின் இறப்பு குறித்து முறையாக விசாரணை செய்யாமலும், குற்றவாளிகளை கண்டுபிடிக்க எவ்வித முயற்சியும் எடுக்காமலும் இருந்ததாக இன்ஸ்பெக்டர் விசித்ராமேரி குறித்து தனிப்படை போலீசார், தஞ்சை சரக டிஐஜியிடம் அறிக்கை தாக்கல் செய்தனர். அதன்பேரில்அவரை சஸ்பெண்ட் செய்து தஞ்சை சரக டிஐஜி ஜியாவுல்ஹக் நேற்று உத்தரவு பிறப்பித்தார்.

The post சிறுமி பலாத்காரம் செய்து எரித்துக் கொலை முறையாக வழக்கை விசாரிக்காத பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Related Stories: