தீபாவளி விழாவில் செல்வப்பெருந்தகை பேச்சு இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது

சென்னை: நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது என்று செல்வப்பெருந்தகை கூறினார். தீபாவளி திருநாளை முன்னிட்டு தென் சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் சார்பில் தொண்டர்களுடன் தீபாவளி திருநாள் விழா சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றது. விழாவுக்கு, தென்சென்னை மத்திய மாவட்ட தலைவர் முத்தழகன் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி பட்டாசுகள் வெடித்து தீபாவளியை கொண்டாடினார்.

இந்நிகழ்ச்சியில், மாநில துணைத் தலைவர் கோபண்ணா, விஜயன், விருகை பட்டாபி, மாநில பொதுச் செயலாளர் இல.பாஸ்கரன், மாவட்ட பொருளாளர் ஜார்ஜ், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் தனசேகரன், தலைமை நிலைய செயலாளர் மன்சூர் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதாவது: தென் சென்னை மத்திய மாவட்ட தலைவர் முத்தழகன் பேசும் போது, காங்கிரஸ் கட்சிக்கு பதவி வழங்கப்படுவதில்லை என பேசினார்.

நாடு முழுவதும் இந்தியா கூட்டணி என்பது வலிமையாக உள்ளது. நம்மிடம் கருத்து வேறுபாடுகள், சங்கடமும் உள்ளது, யாரும் மகிழ்ச்சியாக இருப்பதில்லை. இந்தியா கூட்டணி என்பது தேவையான கூட்டணி, அதற்கு காலங்கள் பதில் சொல்லும், மாவட்ட தலைவர்கள் மூளையாக இருக்க வேண்டும், காங்கிரஸ் கட்சிக்கு மட்டும்தான் சித்தாந்தம் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது, வேறு எந்த அரசியல் கட்சிக்கும் இவ்வாறு இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

The post தீபாவளி விழாவில் செல்வப்பெருந்தகை பேச்சு இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது appeared first on Dinakaran.

Related Stories: