மும்பை: வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே சரிவுடன் காணப்பட்ட பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் அரை சதவீதம் குறைந்து முடிந்தன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 427 புள்ளிகள் சரிந்து 79,942 புள்ளிகளானது. பிற்பகல் வர்த்தகத்தின்போது சென்செக்ஸ் 547 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 79,821 புள்ளிகளுக்கு சரிந்து மீண்டது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 19 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாயின. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 126 புள்ளிகள் சரிந்து 24,341 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
The post மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 427 புள்ளிகள் சரிவு! appeared first on Dinakaran.