×

ஆப்பிள் ரிப்பன் சேவ்

தேவையானவை:

ஆப்பிள் துண்டுகள் – 8,
கடலை மாவு, அரிசி மாவு – தலா 1 கப்,
மிளகாய்த் தூள் – ½ டீஸ்பூன்,
வெண்ணெய் – 1 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

ஆப்பிள் துண்டுகளை தோல் சீவி நன்றாக விழுது போல் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். இதனுடன் கடலைமாவு, அரிசி மாவு, வெண்ணெய், உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து நன்கு பிசையவும். மாவை நாடா அச்சில் போட்டு எண்ணெயில் பிழிந்து பொரித்தெடுக்கவும். ஆப்பிள் ரிப்பன் சேவ் வித்தியாச சுவையில் இருக்கும்.

The post ஆப்பிள் ரிப்பன் சேவ் appeared first on Dinakaran.

Tags :
× RELATED வாழைப்பிஞ்சு பருப்பு உப்புமா