தினசரி ரூ.24 கோடி மதிப்புள்ள 60லட்சம் மீட்டர் துணி உற்பத்தி செய்யப்படுகிறது. கோவை மாவட்டத்தில் சூலூர், கண்ணம்பாளையம் பகுதியில் 50 ஆயிரம் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. தினசரி ரூ.12 கோடி மதிப்புள்ள 30 லட்சம் மீட்டர் துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இத்தொழில் மூலம் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நேர்முகமாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் துணி ரகங்கள் வடமாநில வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டு வட மாநிலங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு சாய ஆலைகளில் சாயம் ஏற்றப்பட்டு ஆயத்த ஆடைகள், படுக்கை விரிப்புகள் உள்ளிட்ட பல்வேறு மதிப்பு கூட்டு பொருளாக தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இத்தகைய சிறப்புக்குரிய விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழிலை மேம்படுத்த ஒன்றிய, மாநில அரசுகளுக்கு விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறியாளர்கள் சங்கம் ஆகியவை கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து கோவை, திருப்பூர் மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் கரைப்புதூர் சக்திவேல் கூறியதாவது: வட மாநிலங்களில் ஜவுளி உற்பத்தி தொழில் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. தென்னிந்தியாவில் உள்ள ஜவுளி உற்பத்தி கூடங்கள் வட மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து வருகிறது. காரணம் மகாராட்டிரா, மத்தியபிரதேஷம் உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களில் ஜவுளி உற்பத்தி தொழிலுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக இயந்திரம், இடம் வாங்க நேரடிய மானியம் 30 சதம் முதல் 50 சதம் வரை ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை தொழில் துவங்கியுள்ள தொழில் முனைவோருக்கு சம்பளத்தில் 50 சதம் வரை மானியம் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பருத்தி இலையை நம்பி பெரும்பாலான தொழில் உள்ளது. அதே சமயம் வட மாநிலங்களில் செயற்கை இலை பஞ்சு துணி உற்பத்தி செய்யப்படுகிறது. குறைந்த செலவில் தரமான துணி உற்பத்தி செய்யப்படுவதால் தமிழக துணி உற்பத்தியாளர்களால் போட்டியிட முடிவதில்லை.
20 கவுண்ட் ரகம் 63 இஞ்சு துணி ஒரு மீட்டர் உற்பத்தி செய்ய வட மாநிலங்களில் ரூ.8.50 பைசா செலவாகிறது.அதே சமயம் தமிழ்நாட்டில் ரூ.10.50 பைசா செலவாகிறது. ஒரு மீட்டருக்கு ரூ.2 விலை வித்தியாசம் இருப்பதால் வட மாநிலங்களில் துணி உற்பத்தி தொழில் அந்தந்த மாநில அரசுகளின் பல்வேறு சலுகைகளால் வளர்ச்சி அடைந்து வருகிறது.
மத்தியபிரதேசத்தில் தொழில் கூடத்தில் இருந்து துணி ஏற்றுமதி செய்திட துறைமுகங்களுக்கு பசுமை சுலப சாலை திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொழில் முதலீட்டாளர்கள் அங்கு தொழில் துவங்க ஆர்வம் காட்டுகின்றனர். தமிழ்நாட்டில் ஜவுளி தொழிலை மேம்படுத்த தறிகளை நவீனப்படுத்த வேண்டும். நவீன தறி நுட்பங்கள் குறித்து சிட்ரா மூலம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு ஒரு குழுவை அமைத்து வட மாநிலங்களுக்கு சென்று ஜவுளி தொழில் குறித்து ஆய்வு செய்தி அதன் பின்னர் புதிய ஜவுளி கொள்கையை அரசு வெளியிட வேண்டும்.
உலக சந்தையில் உள்ள விலை நிலவரத்தை விட இந்தியாவில் பஞ்சு விலை கூடுதலாக உள்ளது. சர்வதேச சந்தை விலைக்கே இந்தியாவிலும் பஞ்சு கிடைக்க வேண்டும். அப்போதுதான் உலக நாடுகளுடன் தொழில் ரீதியாக போட்டியிட முடியும். பஞ்சு இறக்குமதி வரியை நீக்க வேண்டும். தமிழ்நாடு அரசு விசைத்தறி தொழிலை மேம்படுத்த உட்கட்டமைப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் இருந்து கடந்த தீபாவளி பண்டிகையின்போது ரூ.ஆயிரம் கோடிக்கு துணி வர்த்தகம் நடைபெற்றது. நடப்பாண்டு பல்வேறு காரணங்களால் ரூ.600 கோடிக்குதான் துணி விற்பனை நடைபெற்றது.
ரூ.400 கோடி மதிப்பிலான துணிகள் விற்பனை இன்றி குடோன்களில் தேக்கம் அடைந்துள்ளது. இதனால் 50 சதம் துணி உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழில் வளர்ச்சி பெறவும் நலிவடைந்து வரும் இத்தொழிலை பாதுகாக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தமிழ்நாடு அரசு விசைத்தறி தொழிலை மேம்படுத்த உட்கட்டமைப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் இருந்து கடந்த தீபாவளி பண்டிகையின்போது ரூ.ஆயிரம் கோடிக்கு துணி வர்த்தகம் நடைபெற்றது. நடப்பாண்டு பல்வேறு காரணங்களால் ரூ.600 கோடிக்குதான் துணி விற்பனை நடைபெற்றது. ரூ.400 கோடி மதிப்பிலான துணிகள் விற்பனை இன்றி குடோன்களில் தேக்கம் அடைந்துள்ளது.
The post ஜவுளி தொழில் மேம்பாடு அடைய பஞ்சு இறக்குமதி வரி நீக்கப்படுமா? : உற்பத்தியாளர்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.