×
Saravana Stores

கம்யூனிஸ்ட் கட்சியினர் காத்திருப்பு போராட்டம் ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி நடந்தது வந்தவாசி தாலுகா அலுவலகத்தில்

வந்தவாசி, அக்.29: வந்தவாசி அருகே ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வந்தவாசி அடுத்த நல்லூர் கிராமத்தில் விறகு வெட்டும் தொழிலாளர்கள் 11 குடும்பத்தினர், முதலூர் கிராமம் செல்லும் வழியில் உள்ள ஏரி நீர்வரத்து பகுதியில் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் வசிப்பிடம் அருகே அதே கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் மாட்டுக்கொட்டகை ஏற்படுத்தியுள்ளாராம். அந்த கொட்டகையால் அங்கு வசிக்கும் ஒருவரது வீடு சேதம் அடைந்தால் பிரித்து கட்ட முடியாத நிலை ஏற்படும். எனவே, அங்குள்ள ஆக்கிரமிப்பு வீட்டை அகற்றக்கோரி தமிழ்நாடு மழைவாழ் மக்கள் சங்கம் மற்றும் சிபிஎம் கட்சி சார்பில் வந்தவாசி தாசில்தாரிடம் கோரிக்கை மனு கொடுக்கும் போராட்டம் மேற்கொண்டனர்.

சிபிஎம் வட்டார தலைவர் அப்துல்காதர் தலைமையில் சென்றவர்கள், அலுவலகத்தில் தாசில்தார் இல்லாததால் அவர் வரும் வரை காத்திருப்போம் எனக்கூறி, அலுவலகம் எதிரே அமர்ந்து காத்திருப்பு போராட்டமாக மாற்றினர். அப்போது, பகல் உணவை அலுவலகம் எதிரே அமர்ந்து சாப்பிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த டிஎஸ்பி கோவிந்தசாமி அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். சமரசம் ஏற்காத நிலையில் அங்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட மாட்டுக்கொட்டகையை வருவாய்த்துறையினர் அகற்றினர். இந்த தகவலை அவர்களிடம் கூறியதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தில் மாவட்ட பொருளாளர் சுகுமார், முன்னாள் வட்டார செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கம்யூனிஸ்ட் கட்சியினர் காத்திருப்பு போராட்டம் ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி நடந்தது வந்தவாசி தாலுகா அலுவலகத்தில் appeared first on Dinakaran.

Tags : communist party ,Vandavasi taluk ,Vandavasi ,Nallur village ,Mudalur ,
× RELATED வெனிசுலா மாநாட்டில் பங்கேற்க...