- ஈ.வி.வி.கம்பன்
- கார்த்திகை தீபத்திருவிழா
- திருவண்ணாமலை
- திருவண்ணாமலை
- மாவட்ட மக்கள் நண்பர்கள் குழு
- டேனிஷ் மிஷன்
- மேல்நிலை
- பள்ளி
- திருவண்ணாமலை மாவட்ட மக்கள்
- நண்பர்கள்
- குழு
- மாவட்டம்
- ஒருங்கிணைப்பாளர்
- ஏஆறுமுகம்…
திருவண்ணாமலை, டிச. 28: கார்த்திகை தீபத்திருவிழாவில காவல்துறையுடன் இணைந்து பணியாற்றிய மாவட்ட மக்கள் நண்பர்கள் குழுவினருக்கு விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. திருவண்ணாமலை மாவட்ட மக்கள் நண்பர்கள் குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.ஏ.ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் கு.சபரி ஆசிரியர் ஜெய்பிலிப்ஸ், ஐடிஐ முதல்வர் தெ.ராமச்சந்திரபாபு, டி.தட்சிணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் அஜ்மல் முத்தழகன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில், மாநில தடகள துணை தலைவர் எ.வ.வே.கம்பன், எம்பி சி.என் அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டு, பாராட்டு சான்றிதழ் மற்றும் விருதுகளை வழங்கினர். மேலும், 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்ட தீபத் திருவிழாவில், தொடர்ந்து 10 நாட்கள் காவல்துறையுடன் இணைந்து பணியாற்றிய மாவட்ட மக்கள் நண்பர்கள் குழு உறுப்பினர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர். நிகழ்ச்சியில், மூத்தோர் தடகள சங்க மாவட்ட தலைவர் ப.கார்த்திவேல்மாறன் நகர போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஜெ.எஸ்.ரமேஷ், முத்தமிழ் கலை மன்ற தலைவர் ஆ.தே.முருகையன் உட்படப பலர் கலந்து கொண்டனர்.
The post சிறப்பாக பணியாற்றிய தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்று எம்பி, எ.வ.வே.கம்பன் வழங்கினர் தி.மலை கார்த்திகை தீபத்திருவிழாவில் appeared first on Dinakaran.