×

சின்ன நாகபூண்டி காலனியில் சேதமடைந்து காணப்படும் பேருந்து நிழற்குடை: சீரமைக்க கோரிக்கை

ஆர்.கே.பேட்டை: சின்ன நாகபூண்டி காலனி கிராமத்தில் சேதமடைந்து காணப்படும் பேருந்து நிழற்குடையினை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அடுத்த சின்ன நாகபூண்டி காலனி கிராமத்தில் பேருந்து நிழற்குடை உள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட பேருந்து நிழற்குடை என்பதால், நிழற்குடை முழுவதும் சேதமடைந்து சிமென்ட் பூச்சுக்கள் பெயர்ந்து கம்பிகள் தெரியும் வண்ணம் உள்ளது. இதனால், எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் காணப்படும் பேருந்து நிழற்குடையினை சீரமைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதேபோல் ஆர்.கே.பேட்டை, சித்தூர், சோளிங்கர், திருத்தணி ஆகிய கிராமங்களுக்கு செல்லும் மாநில நெடுஞ்சாலையோரம் சேதமடைந்துள்ள பேருந்து நிழற்குடையை சீரமைத்து, புதிய நிழற்குடை கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள், மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சின்ன நாகபூண்டி காலனியில் சேதமடைந்து காணப்படும் பேருந்து நிழற்குடை: சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chinna Nagapoondi Colony ,RK ,Pettah ,Nagapoondi Colony ,RKpet, Tiruvallur district ,Nizhalkudai ,Dinakaran ,
× RELATED தொடர் கனமழையால் மரம் விழுந்து சார் பதிவாளர் அலுவலக சுற்றுச்சுவர் சேதம்