×

மின் விளக்கு வசதி அமைக்க கோரிக்கை

 

கரூர், அக். 29: கரூர் மாவட்ட விளையாட்டு மைதானம் செல்லும் சாலையில் கூடுதலாக மின் விளக்கு வசதி அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கரூர் தாந்தோணிமலை திண்டுக்கல் சாலையில் கலெக்டர் அலுவலகம் முன்னதாக மாவட்ட விளையாட்டு மைதானத்துக்கு செல்லும் சாலை பிரிகிறது. இந்த சாலையோரம் தற்போது புதுப்புது குடியிருப்புகள் உருவாகி வருகின்றன.

ஆனால், சாலையில் குடியிருப்புகளுக்கு ஏற்ப மின்விளக்கு வசதி குறைவாக உள்ளது எனக் கூறப்படுகிறது. மேலும், மாலை நேரங்களில் ஏராளமான வீரர்கள் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு விட்டு பல்வேறு பகுதிகளுக்கு இந்த சாலையின் வழியாக செல்கின்றனர். எனவே, அனைவரின் நலன் கருதி விளையாட்டு மைதானத்துக்கு செல்லும் சாலையோரம் கூடுதலாக மின் விளக்கு வசதி அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மின் விளக்கு வசதி அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Karur ,Karur Dandonimalai Dindigul Road Collector ,Dinakaran ,
× RELATED கரூர் மாவட்டத்தில் முதியோர்,...