×

கடவூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைக் கட்டடம்: மேலாண்மைக் குழு கலெக்டரிடம் மனு

 

கரூர், அக். 29: கடவூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மரத்தடியில் வகுப்புகள் நடப்பதால், கூடுதல் வகுப்பறைக் கட்டடம் கட்டக் கோரி பள்ளி மேலாண்மைக் குழுவினர் கலெக்டரிடம் மனு அளித்தனர். கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று துறை அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

இந்த முகாமில், கரூர் மாவட்டம் கடவூர் அரசு உயர்நிலைப் பள்ளியின் மேலாண்மை குழுவினர் வழங்கிய மனுவில், கடவூர் அரசு உயர்நிலைப் பள்ளி 2017ம் ஆண்டு நடுநிலைப்பள்ளியில் இருந்து உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தரம் உயர்த்தப்பட்டு 7 ஆண்டுகள் ஆகியும் இதுநாள் வரை பள்ளிக்கு என சரியான வகுப்பறைகள் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லை. 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வரும் நிலையில், ஒரு சில வகுப்புகள் மரத்தடியில் செயல்படுகிறது. இதனால், மாணவர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே, மாணவர்கள் நலன் கருதி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

The post கடவூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைக் கட்டடம்: மேலாண்மைக் குழு கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.

Tags : Kadavur Govt High School ,Karur ,Kadavur Government High School ,Day ,Karur District Collector's Office ,Dinakaran ,
× RELATED பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வரும்...